விவசாயத்துறையின் பங்களிப்பு அளப்பரியது.


இலங்கையின் பொருளாதார நெருக்கடியை இயற்கையோடு இணைந்து வெற்றி கொள்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பொங்கல் வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், 

அனைத்து இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர புரிந்துணர்வுடன் கூடிய நட்பின் அடையாளமாகவும் தை பொங்கல் கொண்டாடப்படுகிறது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருங்கடியான இக்காலகட்டத்தில் விவசாயத்துறையின் பங்களிப்பு அளப்பரியது.

ஆகவே பொருளாதார நெருக்கடியை இயற்கையோடு இணைந்து வெற்றி கொள்வதற்கான நாளாக தைத்திருநாள் அமையப் பிரார்த்திப்போம். 

இனம், மதம், சாதி போன்ற குறுகிய வேறுபாடுகளை மறந்து இயற்கையோடு இணைந்து வாழ்வின் முக்கியத்துவத்தை இந்நாளில் வலியுறுத்த விரும்புகிறேன் என மேலும் தெரிவித்துள்ளார்.

No comments