சங்கத்தானையில் விபத்து ; இளைஞன் உயிரிழப்பு!


யாழ்ப்பாணம் சாவகச்சேரி  சங்கத்தானை பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை  இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சாவகச்சேரி சங்கத்தானையை சேர்ந்த சண்முகலிங்கம் பிரதாப் (வயது 27) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.  

பாதையை கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிளுடன், மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே விபத்து இடம்பெற்றதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.  

No comments