ஆசு மாரசிங்க: ரணிலின் செயலாளர் அசுசியானார்!
தென்னிலங்கை அரசியல்வாதிகளிடையே தன்னினச்சேர்க்கை போன்றவை சாதாரணமாகவுள்ளதொன்றாகும் அதனை சிங்கள ஆங்கில ஊடகங்களும் கண்டுகொள்வதில்லை.

ஆனால் ஜனாதிபதி ரணிலின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஆசு மாரசிங்க வளர்ப்பு நாயொன்று பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதான செய்தி பேசுபொருளாகியுள்ளது.

எனினும் தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டை நிராகரிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

தனக்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைக்கும் பெண் இயக்குநராக இருக்கும் நிறுவனத்தில் நிதி தகராறு ஏற்பட்டதால் இந்த பொய்யான குற்றச்சாட்டுகளை அவர் சுமத்துகிறார். தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோ போலியானது என்றும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் ஆசு மாரசிங்கவின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

முன்னதாக தனது செயலாளர் பதவியை அவர் அவசர அவசரமாக ராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments