மத மாற்ற கொள்கையுடையவரை யாழ்.மாவட்ட செயலராக நியமிக்க வேண்டாம்!


யாழ்ப்பாணத்திற்கு மதமாற்ற கொள்கை உடையவரே மாவட்ட செயலராக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவித்து , சிவசேனை அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டது. 

யாழ்.மாவட்ட செயலகத்தின் முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை குறித்த போராட்டம் இடம்பெற்றது. 

இலங்கை சிவ சேனை அமைப்பின் தலைவர் மறவன் புலவு க.சச்சிதானந்தன் தலைமையில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

யாழ்.மாவட்ட செயலகராக கடமையாற்றி வரும் க. மகேசன் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அதனால் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு புதிய செயலர் நியமிக்கப்படவுள்ளார். அவ்வாறு நியமிக்கப்படவுள்ள புதிய செயலர் மத மாற்ற கொள்கையுடையவர் என குற்றம் சாட்டி , அவரை செயலராக நியமிக்க கூடாது என கோரியே போராட்டத்தினை முன்னெடுத்தனர். 
No comments