கலையுமுன்னர் சுற்றுலா! உள்ளுராட்சி சபைகளை கலைத்து தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பு மாத இறுதியில் விடுக்கப்படுமென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் வடக்கு -தெற்கிற்குமிடையே உள்ள உறவு பாலத்தை மேம்படுத்தும் முகமாக கொழும்பு மாநகர சபையின் முதல்வர் ரோசி சேனநாயக்கவின்  ஏற்பாட்டில்யாழ்ப்பாண மாவட்டத்தினை பிரதிபடுத்தும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் இன்றைய தினம் கொழும்புக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

ஆத்தோடு கொழும்பு மாநகர சபை மற்றும் கொழும்பின் முக்கிய இடங்களை பார்வையிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

விஜயத்தில் யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வர், மானிப்பாய்,சுன்னாகம் பிரதேச சபை தவிசாளர்கள் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளுராட்சிசபைகளில் நாளாந்தம் சண்டையிட்டுக்கொள்ளும் உறுப்பினர்கள் கொழும்பு பயணத்தின் போது ஒற்றுமை பேணியதாக தெரியவருகின்றது.


No comments