சீனி ஊழல்:பெரும் ஊழல்!இலங்கை அரசாங்கம் வருடாந்தம் ரூ.16 பில்லியன் இழப்பை சந்தித்து வருவதை எடுத்துக்காட்டி, சீனி ஊழலால் ஏற்பட்ட வரி வருவாய் இழப்பு ரூ.16 பில்லியனை சிஐடிக்கு விரைவுபடுத்துமாறு கோபா குழு இன்று கோரிக்கை விடுத்துள்ளது. 

இந்த மோசடி தொடர்பாக சிஐடி ஏற்கனவே விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும், ஏனைய விசாரணையை விரைவுபடுத்துமாறு சிஐடியிடம் கேட்டுள்ளதாக கோபாவின் தலைவர் கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.

இந்த மோசடி தொடர்பில் கோபா விசேட விசாரணையை மேற்கொண்டுள்ளதாக கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

இதேவேளை, விசாரணை அறிக்கைகளை அனுப்புமாறு சபாநாயகரிடம் எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments