குவைத்துக்கான இலங்கை தூதுவராக காண்டீபன்!
தர்மலிங்கம் சித்தார்த்தனின் பரிந்துரையின் கீழ் குவைத்துக்கான இலங்கை தூதுவராக காண்டீபன் பாலசுப்ரமணியத்தை நியமிக்க உயர் பதவிகளுக்கான குழு ஒப்புதல் அளித்தது.
அத்துடன் பயணிகள் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவராக உபுல் தர்மதாச மற்றும் தேசிய கடதாசி நிறுவனத்தின் தலைவராக கே.ஏ.விமல் ரூபசிங்க ஆகியோரின் நியமனங்களும் உயர் பதவிகளுக்கான குழுவினால் அங்கீகரிக்கப்பட்டன.
பிரதேச அபிவிருத்தி வங்கியின் தலைவராக எம்.மகிந்த சாலிய நியமனம் பெற்றுள்ளார்.
எச்.எஸ்.பாலசூரிய காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில், அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க,நாடளுமன்ற உறுப்பினர்களான சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, ரிஷாத் பதியுதீன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக்குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர்.
Post a Comment