வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் 151 பேர் நாடு திரும்புகின்றனர்!


கனடாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட நிலையில், வியட்நாம் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 303 இலங்கையை சேர்ந்தவர்களில் 151 பேர் விமானம் மூலம் இலங்கைக்கு திருப்பி வரவுள்ளனர். 

கடந்த நவம்பர் 8ஆம் திகதி மியான்மாரில் இருந்து கனடா நோக்கி சென்ற இலங்கையைச் சேர்ந்த 303 பேர் பயணித்த படகு கடலில் தத்தளித்த நிலையில், படகில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு, வியாட்நாமில் 3 தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தனர். 

அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டு இருந்தவர்கள் தாம் இலங்கைக்கு திரும்ப செல்ல மாட்டோம் என கூறி இருந்தனர். அதில் இருவர் இலங்கைக்கு திரும்ப மாட்டோம் என உயிர்மாய்க்க முயன்ற நிலையில் ஒருவர் உயிரிழந்தார். மற்றையவர்கள் காப்பாற்றப்பட்டு இருந்தார். 

இந்த நிலையில், உலக மீள்குடியேற்ற ஸ்தாபனமான (ஜ.எம்.ஓ) அமைப்பு அனுசரனையுடன் மீண்டும் நாட்டுக்கு திரும்ப விருப்பம் தெரிவித்த 151 பேரை இலங்கைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இவர்கள் நாளை புதன்கிழமை அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைவர்கள் தெரிவிக்கப்படுகிறது. 

No comments