வீடு புகுந்து கொள்ளை - பருத்தித்துறையில் நான்கு இளைஞர்கள் கைது - நகைகளும் மீட்பு


யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் வீடொன்றினை உடைத்து நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்களை பருத்தித்துறை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் , அவர்களிடமிருந்து , 14 பவுண் நகைகளையும் மீட்டுள்ளனர். 

புலோலி சாரையடி பகுதியில், உள்ள வீடொன்றில் வசித்தவர்கள் கடந்த 7ஆம் திகதி வைத்தியசாலை சென்று இருந்த வேளையில் , வீட்டின் கதவினை உடைத்தது உள்நுழைந்த கொள்ளையர்கள் , வீட்டினுள் இருந்த நகைகள் மற்றும் பணம் என்பவற்றை கொள்ளையடித்து சென்று இருந்தனர். 

அது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதை அடுத்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் , பருத்தித்துறை பொலிஸாருக்கு நேற்றைய தினம் புதன்கிழமை கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் பருத்தித்துறை பகுதியை சேர்ந்த 4 இளைஞர்களை கைது செய்திருந்தனர். 

கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , அவர்களிடம் இருந்து தாலிக்கொடி , மோதிரம் உள்ளிட்ட 14 பவுண் நகைகளை மீட்டுள்ளதாகவும் , பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

No comments