தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களை நியமித்து அதிவிசேட வர்த்தமானி வெளியானது!


25 நிர்வாக மாவட்டங்களுக்கான தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் உதவித் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களை நியமித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் உள்ளூராட்சி தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் 4(1) பிரிவின் பிரகாரம் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய மாவட்டச் செயலாளர் தேர்தல் நடத்தும் அலுவலராகவும், அந்தந்த மாவட்டத்தின் துணைத் தேர்தல் ஆணையர் அல்லது உதவித் தேர்தல் நடத்தும் அலுவலராகவும் இருப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments