துணுக்காய் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்ல நிகழ்வுகள்
துணுக்காய் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம் வளாகத்தின் முன்பாக உணர்வெளுச்சியுடன் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன
இன்றைய நாள் தாயக பிரதேசங்களிலும், புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர் நாள் நினைவேந்தல் நினைவுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
அந்தவகையில் தாயகப் பிரதேசமான முல்லைத்தீவு - துணுக்காய் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்திலும், மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வெளுச்சியுடன் இடம்பெற்றன.
மேலும் சரியாக மாலை 06.05மணிக்கு முதன்மைச் சுடறினை மூன்று மாவீரர்களின் தாயார் பொன்னம்மா அவர்களால் ஏற்றப்பட, ஏனைய மாவீரர்களின் உறவுகளால் சமநேரத்திலேயே ஏனைய சுடர்களும் ஏற்றப்பட்டன.
அத்துடன் மாவீரர்களின் உறவுகள் பூத்தூவி, கண்ணீர் சொரிந்து தமது உறவுகளான மாவீரச் செல்வங்களை உணர்வெளுச்சியுடன் நினைவேந்தினர்
இதே வேளை குறித்த மாவீரர் துயிலுமில்லத்தில் இருந்த மாவீரர்களின் கல்லறைகள் இடித்தழிக்கப்பட்டு ராணுவத்தினரின் 65வது காலாட்படை பிரிவு தற்போது இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது
இந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் மாவீரர்களின் உறவினர்களோடு, மக்கள் சார்பாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்தி: ஜெகதீஸ்வரன் டிசாந்த
Post a Comment