வவுனியாவில் விபத்து: 15 பேர் காயம்!!

வவுனியா - கனகராயன்குளம் பகுதியில் பேருந்து ஒன்றும் டிப்பர் கனரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

தங்காலையில் இருந்து, யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து, யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனம் ஒன்றுடனொன்று மோதிக்கொண்டதில் இன்று (24) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள், கிளிநொச்சி, வவுனியா மற்றும் மாங்குளம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments