கனடியத் தேசிய வீரர் நினைவு நாளுக்கு அழைப்பு: கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம்


நவம்பர்11.2022 வெள்ளிக்கிழமை அன்று, கனடியத் தேசிய வீரர் நினைவு நாள் ஆகும்.  கனடா வாழ் மக்கள் அனைவரும் கனடியத் தேசிய வீரர்கள் அனைவருக்கும் வீர வணக்கம் செய்யும் இந்த வணக்க நாள் ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூரப்படுவதை நாம் அனைவரும் அறிவோம். 

கனடா வாழ் அனைத்து மக்களோடும், தமிழ் மக்கள் அனைவரோடும் இணைந்து நின்று கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம் தனது வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது. 

சொந்த மண்ணை விட்டுப், புலம் பெயர்ந்து கனடாவில் வாழும் ஈழத் தமிழ் மக்களாகிய எமக்குக் கனடிய மண் ஆதரவு தந்து வாழ வைத்துக் கொண்டிருக்கின்றது.  கனடா வாழ்  ஈழத் தமிழர்களாகிய நாம், இங்கு வாழும் பல்லினப் பண்பாட்டு மக்களோடு வாழும் எைது நல் வாழ்வுக்காகக் கனடிய மண்ணை மதித்துப் போற்றுகின்றோம். நன்றியுணர்வோடும் வாழ்கின்றோம். 

கனடிய மண்ணுக்காகத் தாயக உணர்வோடு, தமது தேசியக் கடமையைச் செய்த கனடியத் தேசிய வீரர்கள் அனைவரையும் நாம் பொப்பி மலர் அணிந்து, வணங்கி நிற்கின்றோம். 

கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம், 11.11. 2022 வெள்ளிக்கிழமை அன்று, கனடா வாழ் ஈழத் தமிழ ; மக்கள் அனைவரோடும் இணைந்து நின்று கனடியத் தேசிய வீரர் நினைவு நாளை நினைவு கூர்கின்றது. 

 நன்றி 
 வணக்கம். 

 தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம். 

 

தொடர்பு இலக்கம் 647 619 3619 


 

No comments