மணிவண்ணன் தரப்பிற்கு வெற்றி!தமிழ் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து பிளவுபட்டுள்ள வி.மணிவண்ணின் தரப்பின் கீழுள்ள நல்லூர் பிரதேச சபையின் பாதீடு இன்று 15 வாக்குகள் ஆதரவளித்த நிலையில்  வெற்றி பெற்றுள்ளது.

நல்லூர் பிரதேச சபையின் பாதீடு பிரதேச சபை தலைவர் மயூரன் அவர்களால் வாசிக்கப்பட்டது. நல்லூர் பிரதேச சபை 20 உறுப்பினர்களைக் கொண்டது.

இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இருவர் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் சபைக்கு வருகை தரவில்லை.  ஏனைய கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்த நிலையில், ஆதரவாக 15 வாக்குகள் பெற்று பாதீடு வெற்றியளித்துள்ளது.

 

No comments