5முட்டை 300? ஒரு இலட்சம் அபராதம்!ஐந்து முட்டைகளை அதிக விலைக்கு விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டுக்குள்ளான வியாபாரி ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஒரு முட்டை 60 ரூபா வீதம் 5 முட்டைகளை 300 ரூபாவுக்கு விற்பனை செய்த வர்த்தகர் ஒருவர் ஹம்பாந்தோட்டை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு  நீதிவான் முன்னிலையில் இன்று (04) ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போதே அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டது.

ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலாளர் எச்.பி.சுமணசேகரவின் பணிப்புரையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.


 

No comments