மாவீரர் வாரத்தில் நல்லூரில் மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கபட்ட கல்வெட்டு மக்கள் வணக்கத்திற்காக திறந்து வைப்பு

மாவீரர் நாள் வாரம் ஆரம்பமாகிய இன்ற யாழ்ப்பாணம் நல்லூர்ப் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு அருகாலையில்

மாவீரர்களின் பெயர்கள் உள்ளடங்கிய கல்வெட்டு மக்கள் வீரவணக்கம் செலுத்துவதற்கான திறந்து வைக்கப்பட்டது.

மாவீரர்கள் பந்தல் அமைக்கப்பட்டு அதனுள் மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளை 17 மாவீரர்களின் பெற்றோர்கள் மாலை அணிவித்து திறந்து வைத்தனர்.

இக்கல்வெட்டுக்களில் உள்ள 17 ஆயிரம் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்த மாவீரர் நாள் வரை மக்கள் வணக்கம் செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்பட்டுள்ளது.


No comments