வாக்னர் துணை இராணுவக் குழுவின் தலைமையகம் திறந்து வைப்பு


இரகசியமாக இயங்கசிய வந்த ரஷ்ய துணை இராணுவக் குழுவான வாக்னர் முதல் முறையாக அதன் தலைமையகத்தை ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நேற்று வெள்ளிக்கிழமை திறந்துள்ளது.

இரகசியமான துணை இராணுவக் குழுவை நிறுவி லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் உக்ரைனில் பணியமர்த்தப்பட்டிருப்பதை சமீபத்தில் உறுதிப்படுத்திய இராணுவக் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் (Yevgeny Prigozhin), தனது நிறுவனத்தின் கான்கார்ட் இணையதளத்தில் ஒரு அறிக்கையில் தேசிய ஒற்றுமை தினத்தன்று அலுவலகத்தைத் திறப்பதாக அறிவித்தார்.

வாக்னர் என்ற பெரிய வெள்ளைப் பலகையுடன் கூடிய க, பல மாடிக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம், எவ்ஜெனி பிரிகோஜின் தான் குழுவை நிறுவியதாக ஒப்புக்கொண்டதன் மூலம் பல வருட வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். பல ஆண்டுகளாக, வாக்னர் குழு வெளிநாட்டில் மாஸ்கோவின் லட்சியங்களை மேம்படுத்துவதில் ஒரு பங்கைக் கொண்டிருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது, கிரெம்ளின் எந்த தொடர்பையும் மறுத்துள்ளது.

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில் இந்தக் குழுவும் அதன் தலைவரும்  கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட நாட்டின் முழு அளவிலான படையெடுப்பிற்குப் பெரும் பங்கைக் கொண்டிருந்தனர்.


No comments