நல்லூர் கந்தசஷ்டி விரதம் தொடர்பில் யாழ். மாநகர சபையின் அறிவித்தல்
நல்லூர் கந்தசஷ்டி விரதம் தொடர்பில் யாழ். மாநகர சபையின் அறிவித்தல்
நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தஷஷ்டி உற்சவத்தை முன்னிட்டு நல்லைக் கந்தன் வெளி வீதியுலா வரும்வேளையில்,
26.10.2022 ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 29.10.2022 ஆம் திகதி வரை மாலை 5.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரையிலும்,
சூரன்போர் திருவிழாவான எதிர்வரும் 30.10.2022 அன்று ந.ப 12.00 மணி தொடக்கம் பி.ப 6.00 மணி வரையிலும்,
31.10.2022 அன்றுமாலை 5.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரையும்,
நல்லூர் ஆலய சுற்றாடலில் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வாகனங்கள் உள் நுழைய முடியாதவாறு பாதைகள் மூடப்பட்டிருக்கும்.
இந் நேரங்களில் மாத்திரம் வாகனங்கள் ஆலயச் சுற்றாடலினைத் தவிர்த்து வழமையான மாற்றுப் பாதைகளூடாக பயணிக்க முடியும் என்றும் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார்.
Post a Comment