உலகின் அழுக்கு மனிதன் உயிரிழந்தார்: 50 ஆண்டுகள் குளிக்கவில்லை!!


உலகிலேயே அழுக்கு மனிதர் என்று ஊடகங்களால் அடைப்பட்ட ஈரான் நாட்டின் தெற்கு மாகாணமான ஃபார்ஸில் வாழ்ந்த அமு ஹாஜி என்ற மனிதன் தனது 94 வயதில் உயிரிழந்தார்.

கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தண்ணீர் மற்றும் சவர்க்காரம் படமால் அவர் குளிக்காமல் இருந்தார். குளித்தால் நோய் வாய்பட்டு விடுவோம் என்ற அச்சத்தில் 50 ஆண்டுகளாக குளிக்காமல் இருந்தார்.

அவரைச் சுத்தம் செய்ய கிராமவாசிகளின் முயற்சிகள் எடுத்தபோதும் அவர் அதனைத் முயற்சிகளைத் தவிர்த்தார்.

இருந்த போதும் அமு ஹாஜி  அழுத்தத்திற்கு அடிபணிந்து சில மாதங்களுக்கு முன்பு குளிக்க வார்க்கப்பட்டார் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் அவர் சிறிது காலம் நோய்வாய்பபட்டு இருந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இறந்தார் என்று ரானின் ஐஆர்என்ஏ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

2014 இல் தெஹ்ரான் டைம்ஸுக்கு வழங்கிய  நேர்காணலில், அவர் தனக்குப் பிடித்த உணவு முள்ளம்பன்றி என்றும்,டெஜ்கா கிராமத்தில் கட்டப்பட்ட செல்கல் குடிசைக்கும் இடையில் வாழ்ந்ததாகவும் தெரிவித்தார்.

அவரது உணவில் அழுகிய இறைச்சி மற்றும் பழைய எண்ணெய் கொள்கலனில் இருந்து குடித்த சுகாதாரமற்ற தண்ணீர் இருந்தது. அவர் புகைபிடிப்பதை விரும்பினார்.

குறைந்தது ஒரு நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வெண்சுருட்டுகளை (சிகரெட்டுகளை) புகைப் பிடிப்பவர்.


அவரைக் குளிப்பாட்டவோ, அல்லது குடிக்க சுத்தமான தண்ணீரைக் கொடுக்கவோ செய்த முயற்சிகள் அவரை வருத்தமடையச் செய்ததாக செய்தி நிறுவனம் கூறியது.

இருப்பினும், அதிக நேரம் குளிக்காமல் சென்றவர் என்ற சாதனையை அவர் படைத்தாரா என்பது விவாதத்திற்குரிய விஷயமாக உள்ளது.

திருமணம் செய்யாமல் தனித்து வாழ்ந்து வந்த அவர், காலமாகி விட்டதாக ஈரான் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

அமோ ஹாஜியின் வாழ்க்கையை மையமாக கொண்டு, The Strange Life of Amou Haji என்ற பெயரில் 2013ம் ஆண்டு ஆவணப் படமும் எடுக்கப்பட்டது.

No comments