டக்ளஸிற்கு எதிராக மீனவர்கள் போராட்டம்!

 


பூநகரி கிராஞ்சியில் உள்ளுர் தமிழ் மீனவர்கள் அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக தொடர்போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.திட்டமிட்ட வகையில் தமது கடற்பரப்பினை தாரைவார்த்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.அலுவலகத்தில் இன்று மீனவர்கள் முறையிட்டுள்ளனர்.

தாம் பெற்றுக் கொண்ட இலஞ்சங்களுக்கு பதிலாக புதிய கடலட்டை பண்ணையாளர்களை போராடத் தூண்டி பண்ணைகளின் இருப்பை தக்க வைத்துக் கொள்ள முற்படுவதாகவும் மீனவ அமைப்புக்கள் கூறுகின்றன.

எமது கடல் எமக்குத்தான் சொந்தம் . இதை யாருக்காகவும் தாரை வார்க்க முடியாது என தெரிவித்துள்ள மீனவ அமைப்புக்கள் முறையற்ற செயற்பாடுகள் தொடருமாயின் நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் எனவும் எச்சரித்துள்ளன.

இதனிடையே யாழ்ப்பாணத்திலுள்ள ஆட்கள் நடமாட்டமற்ற பல தீவுகள் கடலட்டை பண்ணைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.

கிளிநொச்சியிலும் கௌதாரி முனை உட்பட பெரும்பகுதி கடற்பரப்புக்கள் வெளியிட மீனவர்களிற்கு ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments