உக்ரைனின் பல நகரங்கள் மீது தொடர் ஏவுகணைத் தாக்குதல்! 75 ஏவுகணைகள் வீச்சு!!


உக்ரைனின் பல பகுதிகள் மீது ரஷ்யப் படைகள் இன்று உக்ரைனின் தலைநகர் கீவ் உட்பட பல நகரங்கள் மீது கண்மூடித்தனமான ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். 

இன்று திங்கட்கிழமை காலை உக்கரைன் மீது 75 ஏவுகணைகளை ரஷ்யா ஏவிதாக உக்ரைனிய இராணுவத் தளபதி ஜெனரல் வலேரி ஜலுஷ்னி சமூக ஊடகங்களில் தெரிவித்தார். 

ரஷ்யாவால் ஏவப்பட்ட 41 ஏவுகணை உக்ரைனியப் படைகள் சுட்டு வீழ்தியதாக ஜெனரல் வலேரி ஜலுஷ்னி அவர் மேலும் தெரிவித்தார். இதனை சுயாதீமாக எவராலும் உறுதிப்படுத்த முடியவில்லை. 

இதில் பலர் உயிரிழந்துடன் மேலும் பலர் காயமடைந்தனர்.

அதிகபட்ச சேதத்தை ஏற்படுத்தும் வகையில் ரஷ்யா தாக்குதல்களை நடத்தியது என உக்ரைனிய அதிபர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.

ரஷ்யா வேண்டுமென்றே ஏவுகணைத் தாக்குதல்களை நாடு முழுவதிலும் உள்ள பல நகரங்களில் நிகழ்த்தியது என்றார். அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகளை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

தாக்குதல்களின் போது உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பையும் ரஷ்யா குறிவைத்ததாக ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.

அவர்கள் பீதியையும் குழப்பத்தையும் விரும்புகிறார்கள், அவர்கள் நமது ஆற்றல் அமைப்பை அழிக்க விரும்புகிறார்கள் என்றார்.

இலக்குகள் மக்களை இலக்கு வைக்கவும் தேசத்தை ஏற்படுத்தவும் தாக்குதலுக்கான நேரம் தேர்ந்தேடுக்கப்பட்டதாக அவர் குற்றம் சுமத்தினார்.

ரஷ்யாவையும் கிரிமியன் தீபகற்பத்துடன் இணைக்கும் கெர்ச் பாலத்தின் மீது கடந்த வார இறுதியில் குண்டு வெடிக்க வைத்து பாலத்தை சேதப்படுத்தியதற்குப் பதிலடியாக இன்று உக்ரைனின் தலைநகர் உட்பட பல உக்ரைனியத் நகரங்கள் மீது ரஷ்யா தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

No comments