தீபாவளி:மின்வெட்டிலையாம்
தீபாவளி தினத்தன்று நாடளாவிய ரீதியில் முழுமையான மின்சார விநியோகத்தினை வழங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிககை மேற்கொள்ளப்பட்டுள்ளராம்.
நாடளாவிய ரீதியில் அமுலப்படுத்தப்பட்டு வருகின்ற மின் வெட்டை எதிர்வரும் திங்கட் கிழமையான தீபாவளி பண்டிகையன்றும் வழமை போன்று நடைமுறைப்படுத்துவதற்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக அவதானம் செலுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதமர் தினேஸ் குணவர்த்தன மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆகியோருடன் நேற்று தொடர்பு கொண்டு, இந்துக்களினால் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதற்கான வரலாற்றுக் காரணத்தை தெளிவுபடுத்தியதுடன், அன்றைய நன்நாளில் நாட்டை சில மணி நேரங்கள் இருளில் மூழ்கடிப்பது பொருத்தமற்ற செயற்பாடு என்பதையும் தெளிவுபடுத்தினாராம்.
இந்நிலையில், எதிர்வரும் 24 ஆம் திகதி மின்சார தடை அமுல்ப்படுத்தப்படாது என்பதை இன்று இலங்கை மின்சார சபையினால் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Post a Comment