சதியிலிருந்து தப்பித்ததாக சொல்கிறார் சஜித்!தம்மை நாட்டின் பிரதமராக நியமித்து தனது அரசியல் வாழ்க்கையை அழிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன திட்டம் தீட்டியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச தன்னை பிரதமர் பதவியை ஏற்குமாறு கோரிக்கை விடுத்ததாகவும் சஜித் பிரேமதாச செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மக்களுக்காகவோ அல்லது நாட்டின் நலனுக்காகவோ அவர் என்னை பதவி ஏற்குமாறு தெரிவிக்கவில்லை. நான் பிரதமராக பதவியேற்ற பின்னர் எனக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர அவர்கள் திட்டமிட்டனர் என்பதை நான் அறிந்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார் .

ராஜபக்சவின் முக்கிய பாதுகாவலரான தற்போதைய ஜனாதிபதிக்கு ஆதரவாக 134 வாக்குகள் பதிவாகியுள்ளன. பதவியேற்ற சில வாரங்களுக்குப் பின்னர் நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் என்னை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி, எனது குணாதிசயத்தையும், அரசியல் வாழ்க்கையையும் சீரழிக்க திட்டமிட்டனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments