ஊருக்கே உபதேசம்:உனக்கல்ல:விமல்!



சட்டவிரோதமான முறையில் 75 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான சொத்துக்கள் மற்றும் பணத்தை சம்பாதித்ததாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை தொடர முடியாது என விமல் வீரவங்ச பூர்வாங்க ஆட்சேபனையை தாக்கல் செய்துள்ளார்.

குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றில் நேற்று (26) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் அரச அதிகாரிகளுக்கு எதிராக மட்டுமே இவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைக்க முடியும் எனவும் அது பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு பொருந்தாது எனவும் வீரவன்ச சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார். எனவே இந்த வழக்கை தொடர முடியாது என வழக்கறிஞர் தெரிவித்தார்.

அப்போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், இந்த ஆரம்ப ஆட்சேபனை தொடர்பான எழுத்துமூல உரைகளை சமர்பிக்க திகதி வழங்குமாறு நீதிமன்றத்திடம் கோரினார்.

அதன்படி, வழக்கை நவம்பர் 28-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, அன்றைய தினம் எழுத்துப்பூர்வ உரைகளை சமர்ப்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

No comments