மல்கம் இற்கும் சிக்கல்!

 

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் பாதுகாப்பில் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

காவிந்த ஜயவர்தன தகவல் வெளியிடும் வரை அது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என அங்கு இருந்த பாதுகாப்பு பதில் இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

கர்தினாலின் பாதுகாப்பு குறித்து உடனடியாக ஆராயப்படும் எனவும், அவருக்குத் தேவையான பாதுகாப்பை வழங்க அரசாங்கம் தயங்காது எனவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கர்தினாலின் பாதுகாப்பு குறித்து இன்றே ஆராயப்படும் எனவும் பிரமித பண்டார தென்னகோன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments