4 அரசியல் கைதிகள் நீதிமன்றால் விடுதலைதென்னிலங்கை சிறைகளில் 16 வருடங்களுக்குப் பின் மூன்று தமிழ் அரசியல் கைதிகள் நிரபராதிகள் என நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக 17 ஆண்டுகளுக்குப் பின் மேன்முறையீட்டு நீதி மன்றத்தினால் தமிழ் அரசியல் கைதியான சின்னப்பர் பாக்கியநாதன்- வயது 70 கடந்த வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்;டுள்ளார்.

எனினும் தீபாவளியை முன்னிட்டு இலங்கை அரசினால் விடுவிக்கப்படுவதாக அறிவித்த  அரசியல் கைதிகளில் நால்வரே நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே அரசியல் கைதிகளின் விடுதலையை வரவேற்கின்ற அரசியல் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள்  அறிக்கையுடன் மாத்திரம் நின்றுவிடாது அவர்களது விடுதலைக்காக பாடுபட வேண்டும் என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


No comments