8 அரசியல் கைதிகள் நாளை விடுதலை!

 


நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் நாளை வியாழக்கிழமை விடுதலை செய்யப்படவுள்ளனர்.

இலங்கை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் அவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

அரசியல் கைதிகளது விடுதலை குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் தெரிவித்திருந்த நிலையில் குரலற்றவர்களின் குரல் அமைப்பு தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

நாளை விடுதலை செய்யப்படும் 08 பேரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் ஐந்து வருடம் முதல் 200 வருடங்கள் வரை தண்டனை வழங்கப்பட்டவர்கள்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா கொலை முயற்சியுடன் தொடர்புபட்டதாக தெரிவித்து தண்டனை வழங்கப்பட்டிருந்த இந்து மதகுருவான ரகுபதி சர்மா உள்ளிட்ட வரதராஜன் மற்றும் இலங்கேஸ்வரன் ஆகிய மூவரும் விடுவிக்கப்படவுள்ளவர்களுள் உள்ளடங்கியுள்ளனர்.


No comments