புனர்வாழ்வு சட்டமூலம் முற்றிலும் முரணானது!



இலங்கையின் புனர்வாழ்வு சட்டமூலம் அரசியலமைப்பின் 112 (1) வது பிரிவுக்கு முற்றிலும் முரணானது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் இன்று (20) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வு பணியக சட்டமூல வரைவு கடந்த செப்டம்பர் 23ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், இராணுவத்தால் நடத்தப்படும் ‘புனர்வாழ்வு’ மையங்களில் மக்களை தடுத்து வைப்பதற்கு அதிகாரிகளுக்கு பரந்தளவிலான அதிகாரங்களை வழங்கும் சட்டமூல வரைவை இலங்கை அரசாங்கம் மீளப் பெற வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்தது.

இந்த சட்டமூலம் புனர்வாழ்வு மையங்களில் போதைக்கு அடிமையானவர்கள், முன்னாள் போராளிகள், வன்முறை, தீவிரவாத குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் வேறு ஏதேனும் குழுவை சேர்ந்தவர்கள் வலுக் கட்டாயமாக காவலில் வைக்க அனுமதிக்கும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments