டக்ளஸ் தற்போது பிரபல வியாபாரி!கடற்பரப்பினை விற்பனை செய்து வருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக மீண்டும் உள்ளுர் மீனவ அமைப்புக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

இன்று செவ்வாய்க்கிழமை யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக யாழ் மாவட்டத்தில் உள்ள மீனவ குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

யாழ் மாவட்டத்தில் பாரம்பரியமாக மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு வருகின்ற மீனவ மக்களுக்கு கடற் தொழில் அமைச்சு உதவிக்கரங்கள் நீட்டுவதை விடுத்து அட்டைப்பண்ணை அமைப்பதிலே கூடிய கவனம் செலுத்தி வருகிறது.

யாழில் அட்டை பண்ணைகளை அமைப்பது யார் எனத் தேடிப் பார்த்தால்  பெரும்பாலும் யாழ்ப்பாணத்தை சாராத கடற் தொழில் தெரியாத வெளி மாவட்ட பண முதலைகளே எமது கடற்பரப்பை ஆக்கிரமிக்கின்றன.

யாழ் மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட மீனவ சங்கங்கள் இருக்கின்ற நிலையில் எந்த ஒரு சங்கத்திலும் அங்கத்தவராக இல்லாதவர்கள்  யாழ் மாவட்டத்தில் அட்டைப் பண்ணை அமைத்துள்ளனர்.

அவ்வாறு அமைத்தவர்கள் பாரம்பரியமாக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்ற எமது மீனவர்கள் பாதிக்கப்படும் வகையில் கடல் நீரோட்டங்களை மறித்து பண்ணை போடுகிறார்கள்.

அதுமட்டுமல்லாது வழங்கப்பட்ட கடல் அளவுக்கு மேலதிகமாக சில இடங்களில் கடலை மறித்து அட்டைப் பண்ணைக்காக வேலிகளும் அமைத்துள்ளார்கள் என மீனவ அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.


No comments