கண்ணிவெடி அகற்ற:230 மில்லியன்!இலங்கையின் வடக்கு மாகாணத்தில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்காக ஜப்பான் அரசாங்கம், ஹலோ ட்ரஸ்ட் அறக்கட்டளைக்கு மொத்தம் 647,887 அமெரிக்க டொலர்களை (சுமார் ரூ. 230 மில்லியன்) வழங்கியுள்ளது.

இது தொடர்பான ஒப்பந்தம் கொழும்பில் உள்ள தூதுவரின் இல்லத்தில் ஜப்பான் தூதுவர் ஹிடேக்கி மிசுகோஷி மற்றும் ஹலோ அறக்கட்டளையின் திட்ட மேலாளர் ஸ்டீபன் ஹோல் ஆகியோருக்கு இடையே கையெழுத்தானது.

ஹலோ அறக்கட்டளை, 2002 இல் இலங்கையில் தனது செயற்பாடுகளை ஆரம்பித்ததுடன், ஜப்பானிய உதவியின் மூலம் ஏறத்தாழ 20% அனுமதி நடவடிக்கைகளை நிறைவேற்றியுள்ளது.

2002 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பகுதியில் ஜப்பான் பெரும் நன்கொடை அளிப்பதுடன், தற்போது இலங்கையில் இயங்கி வரும் கண்ணிவெடி அகற்றும் நான்கு அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் உதவுகின்றது.

No comments