திருவடிநிலை கடலிலிருந்து சடலம்!
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை திருவடிநிலை கடலிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருவடிநிலை கரையோரமாக அமைக்கப்பட்டுள்ள இறால் தொட்டிலில் சடலம் காணப்பட்டதாகவும் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் சடலத்தை அடையாளம் காண்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Post a Comment