லண்டனில் கத்திக்குத்து: இரு காவல்துறையினர் படுகாயம்!

பிரித்தானியாவில் சனநடமாட்டம் அதிகமாக இருந்த வெஸ்ட் எண்ட் பகுதியில் இரு காவல்துறையினர் கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

நேற்று வெள்ளிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றதாக பெருநகரக் காவல்துறை தெரிவித்துள்ளது. அத்துடன் இத்தாக்குதல் பயங்கரவாதமாகப் கருத முடியாது என காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் லீசெஸ்டர் சதுக்கத்திற்கு அருகே ரோந்து சென்று கொண்டிருந்தபோது, ​​வெள்ளிக்கிழமை அதிகாலையில் கத்தியுடன் ஒரு நபரை எதிர்கொண்டனர். அவரைத் தடுத்து வைக்க முயன்றபோது காவல்துறை அதிகாரிகள் மீது குறித்த நபர் கத்தியால் குத்தியுள்ளார். 

கத்திக்குத்து இலக்கான இரு அதிகாரிகளில் ஒருவர் ஆண் எனவம் மற்றவர் பெண் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரும்  காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பெண் அதிகாரியின் கையில் பலத்த கத்திக்குத்து காயம் ஏற்பட்டதாகவும், அவரது சக ஊழியர் கழுத்து மற்றும் மார்பில் குத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்தின் பெயரில் காவல்துறையினர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

No comments