இருவரில் யார் பிரித்தானியப் பிரதமர்? இன்றிரவு முடிகள் தெரிந்துவிடும்!!


பிரித்தானியாவுக்கான புதிய பிரதமர் பெயர் இன்று திங்கட்கிழமை இரவு அறிவிக்கப்படவுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதிச் சுற்றில் லிஸ் டிரஸ் மற்றும் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் இடையே போட்டி நிலவுகிறது.

இதில் வெற்றி பெறுபவரை அரசு அமைக்கும் படி ராணி இரண்டாம் எலிசபெத் முறைப்படி அழைப்பு விடுப்பார். போரிஸ் ஜான்சன் ராஜினாமாவையடுத்து நாளை புதிய பிரதமர் இங்கிலாந்து அரசுக்கு பொறுப்பு ஏற்பார்.

பதவிக்கு வந்த ஒருவாரத்தில் மின்கட்டணத்தைக் குறைப்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்துள்ள லிஸ் டிரஸ் அடுத்த பிரதமராவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 

புதிய தலைவரை தேர்வு செய்ய கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்கள் சுமார் 1.60 லட்சம் பேர் கடந்த சில வாரங்களாக தபால் மற்றும் ஆன்லைன் மூலமாக வாக்களித்து வந்தனர். இந்த வாக்கு பதிவு வெள்ளிக்கிழமை மாலையுடன் முடிவடைந்தது. அதை தொடர்ந்து உடனடியாக வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.

திங்கட்கிழமை(இன்று) மதியம் 12.30 மணியவில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து இறுதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இங்கிலாந்தை ஆளப்போகும் புதிய பிரதமர் யார் என்பது இன்று தெரிந்துவிடும்.

இதுகுறித்து ரிஷி சுனக் கூறுகையில்:-

இந்த போட்டியில் வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸால் தோற்கடிக்கப்பட்டால், கன்சர்வேடிவ் அரசாங்கத்தை எந்த நிலையில் இருந்தாலும் ஆதரிப்பேன்.

தொடர்ந்து நான் நாடாளுமன்ற உறுப்பினராகவே நீடிக்கத் திட்டமிட்டுள்ளேன். மேலும், யார்க்சயர் ரிச்மண்டில் உள்ள தனது தொகுதியினருக்காக தொடர்ந்து பணியாற்றவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.

புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர், நாளை ஸ்காட்லாந்திற்கு சென்று, அங்கு இரண்டாம் எலிசபெத் மகாராணியால் அவரது பால்மோரல் கோட்டை இல்லத்தில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் முறைப்படி பிரதமராக நியமிக்கப்படுவார்.

No comments