ஒரு திராட்சைபழம் 70 :ஆரஞ்சு பழம் 3000

இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு ஆரஞ்சு பழம் 3000 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. சூப்பர் மார்க்கட் எனும் அங்காடி விற்பனை நிலையங்களில் 200 கிராம் ஆரஞ்சு விலை 621 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிலோ ஆரஞ்சு பழத்தின் விலை 3075.00 ரூபாக்கு விற்பனை செய்யப்படும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

இதற்கு மேலாக இறக்குமதி செய்யப்பட்ட ஒரு திராட்சைபழம் 70 ரூபாவிற்கும் ,ஒரு கிலோ திராட்சை 5000 ரூபாவிற்கு  விற்பனை செய்யப்படுகிறது. இறக்குமதி கட்டுப்பாடுகள், இறக்குமதி வரி அதிகரிப்பு, மற்றும் அந்நிய செலாவணி நெருக்கடி போன்ற காரணங்களால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

No comments