தீ விபத்து: 80 குடிசைகள் தீக்கிரை: 220 பேர் வெளியேற்றம்!!


கொழும்பு கிராண்ட்பாஸ் - கஜிமாவத்தை பகுதியில் குடியிருப்பு தொகுதியொன்றில் நேற்றிரவு 8 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 80 தற்காலிக குடிசை வீடுகள் தீக்கிரையாகியுள்ளன.

கொழும்பு மாநகர தீயணைப்பு திணைக்களம் மற்றும் கடற்படையின் 10 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த தீ விபத்தினால், உயிர்ச்சேதமோ எவருக்கும் காயமோ ஏற்படவில்லை என்பதுடன் 80 குடும்பங்களைச் சேர்ந்த 220 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்

இவர்கள் களனி நதீ விகாரை மற்றும் முவதொர உயன அடுக்குமாடி குடியிருப்பு சனசமூக மண்டபத்தில் தற்காலிக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, கஜீமா வத்தை தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பானிலிருந்து பணிப்புரை விடுத்துள்ளார்.

No comments