ரஸ்யாவிடம் மன்னிப்பு கோரிய இலங்கை!ரஷ்ய ஏரோஃப்ளோட் விமானம் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டமை ஒரு பாரிய தவறு எனவும் இது மீண்டும் நடக்காது என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர் என்றும் போக்குவரத்து, பெருந்தெருக்கள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

 ரஷ்ய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் இதனை தெரிவித்தார். கடந்த ஜூன் 2 ஆம் திகதி அன்று இலங்கையில் ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமானம் தடுத்துவைக்கப்பட்டமை குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் பந்து குணவர்தன, ‘அது ஒரு பாரிய தவறு, அதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

‘இலங்கையில் மீண்டும் ஒருபோதும் இவ்வாறு நடக்காது என்று ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கம் ஆகிய தரப்புகள் உத்தரவாதம் அளிக்கின்றன. இலங்கையில் எந்த விமானத்தையும் தடுத்து வைக்க நாங்கள் விரும்பவில்லை’ என அமைச்சர் பந்துல குணவர்தன ரஷ்ய ஊடகத்;திற்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

No comments