கைதிகள் நிலை மோசம்!



மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளது நிலை மிக மோசமடைந்துள்ளது.

கைதிகளை நேரடியாக சென்று பார்வையிட்டு அவர்களது நிலவரம் தொடர்பாக அரசியல் கைதிகளது பெற்றோர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மனிதநேயத்தோடு செயல்படக்கூடிய அனைவரையும் கேட்டுக்கொள்வதாக  குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் போராட்டகாரர்களை சந்தித்து பேசிய அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் போராட்டத்தை முடிவுறுத்துமாறான கோரிக்கைகளை முன்வைக்க மறுத்திருந்தார்.

குறிப்பாக கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கொலை க முயற்சியில் தொடர்புபட்டதாக கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர் ஒருவரும் போராட்டத்தில் குதித்துள்ளார்.

நீண்ட காலமாக அரசியல்கைதிகளின்  விடுதலை தொடர்பாக பேசப்பட்டு வரும் நிலையில், அண்மைக் காலங்களில் கைது செய்யப்பட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற தமிழ் இளைஞர்கள் கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்து தொடர்கின்றனர்.

வெறும் நீர் மட்டுமே அருந்தி போராட்டத்தை தொடரும்  நிலையில்  அவர்களது உடல்நிலை மோசமடைந்துள்ளது.

போராட்டத்தை தொடரும் கைதிகள் விபரம்:

செ.இன்பராஜ்(பூநகரி)

உ.உமாசுதன்(பூநகரி)

ம.பார்த்தீபன் (பூநகரி)

சி.சுதாகரன் (பூநகரி)

ச.உதயசிவம்(தாழையடி)

பா.நகுலேஸ்வரன்(திருமலை)

லு.அஜந்தன்(கிளிநொச்சி)

ரா.விவேகானந்தன்(கிளிநொச்சி)

யோ.றொபின்சன்(கிளிநொச்சி)

ச.சசிதன்(திருமலை)

ர.சுஜந்தன்(பூநகரி)

வே.சதீஸ்குமார் (திருமலை)

 

No comments