பருவமழை: பாகிஸ்தானில் 937 பேரைக் கொன்றுதள்ளியது வெள்ளம்!


தெற்காசியாவில் பருவமழை பெய்து வருவதால் பாகிஸ்தானில் 343 குழந்தைகள் உட்பட 937 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்தனர். அரை மில்லியனுக்கு மேல் வீடுகள் பாதிப்படைந்துள்ளன.

பலியானவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பலுசிஸ்தான் மற்றும் தெற்கு சிந்து மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்.

பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானின் பெரும் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இது  2010 வெள்ளத்தின் நினைவை மீண்டும் நினைவு படுத்தியுள்ளது.

வெள்ளம் பேரழிவு தருவதால் பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என அரசாங்கம் அறிவித்துள்ளது.



No comments