கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளியேற மறுப்பு!


கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்கள் ஐந்தாம் திகதி மாலை ஐந்துமணிக்கு முன்னர் அந்த பகுதியிலிருந்து  வெளியேறவேண்டும் என காவல்துறையினர் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொள்வதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் மறுத்துள்ளனர்.

காலிமுகத்திடல் பகுதியிலிருந்து வெளியேறவேண்டும் என்ற உத்தரவை நீதிமன்றம் வழங்கவில்லை என ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவரான ஜனஹ ஜனஹ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவை செவிமடுப்பதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தயாரில்லை, நாங்கள் தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பகுதியை முன்னைய அரசாங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கான பகுதியாக அறிவித்திருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்த பகுதியிலிருந்து ஐந்தாம் திகதிமாலை ஐந்து மணிக்கு வெளியேற வேண்டும் என காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

சில ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடாரங்களை அகற்றுகின்றனர் என கொழும்புச் செய்திகள் தெரிவிக்கிறனர்.

No comments