ரஷ்ய டிரோன்களைச் சுட்டு வீழ்த்த வம்பயர் ஏவுகணைகளை வழங்கும் அமெரிக்கா


சிறிய ரக சரக்கு வாகனத்தில் கூட எளிதாக எடுத்துச் சென்று, ரஷ்ய டிரோன்களை சுட்டு வீழ்த்த உதவும் அதிநவீன வம்பயர் (VAMPIRE) ஏவுகணைகளை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்க உள்ளது.

உக்ரைன் படைகளின் நடமாட்டத்தை கண்டறிந்து துல்லியமாகத் தாக்குதல் நிகழ்த்த ரஷ்யா டிரோன் விமானங்களை அதிகளவில் பயன்படுத்திவருகிறது. அவற்றை உக்ரைன் படைகள் அமெரிக்கா வழங்கிய ஸ்டிங்கர் ஏவுகணைகள் மூலம் சுட்டு வீழ்த்திவந்த நிலையில், தற்போது தட்டுப்பாடு காரணமாக அதைவிட அதிநவீன வம்பயர் ஏவுகணைகளை அமெரிக்கா வழங்க உள்ளது.

சிறிய வாகனத்தில் கூட எளிதாக பொருத்திப் பயன்பயன்படுத்தக் கூடிய இந்த ஏவுகணை, ஒரே சமயத்தில் 4 ஏவுகணைகளைப் பொருத்தி, லேசர் தொழில்நுட்பம் மூலம் வான் மற்றும் நிலத்தில் உள்ள இலக்குகளை வேகமாக நகர்ந்தபடியே துல்லியமாகத் தாக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 

No comments