ஆளாளுக்கு திட்டுவாங்கும் அரச ஊழியர்கள்?இலங்கையில் அரச பணியாளர்களை கடமையிலிருந்து வெளியேற்ற தற்போதைய அரசு கடும் பிரச்சாரங்களை முடுக்கிவிட்டுள்ளது.

ஏற்கனவே பஸில் ராஜபக்ச முதல் ரணில் ஈறாக அரச ஊழியர்களை திட்டிதீர்த்துவருகின்ற நிலையில் 6 இலட்சம் அரச ஊழியர்களில் சுமார் 10 இலட்சம் பேர் வினைத்திறனான சேவையை செய்வதில்லை என மற்றொரு அமைச்சரான ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அரச சேவையை அரச உத்தியோகத்தர்களாலேயே விமர்சிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ள  அவர் அரசியல்வாதிகள் பெரிய தியாகம் செய்ய வேண்டும். அவர்கள் கடினமாக உழைக்க வேண்டும். மக்களின் பிரச்னைகளுக்கு உடனடி முடிவு எடுக்க வேண்டும். அதேபோல பொது சேவை ஊழியர்களும் பணியாற்ற வேண்டும். அரசுப் பணியில் 16 இலட்சம் பேர் உள்ளனர். இந்த 16 இலட்சம் பேரில் 6 இலட்சம் பேர் தங்கள் சேவையை நேர்மையாகச் செய்கிறார்கள் என்பதை நான் மிகத் தெளிவாகச் சொல்கிறேன். பொதுப்பணித்துறையை குறை கூறுவது அரசு ஊழியர்கள்தான். அரசியல்வாதிகளும், அரசு ஊழியர்களும் உறுதிமொழி எடுத்தால் நேர்மையாக சேவை செய்தால் மக்கள் பிரச்சினைகள் விரைவாக தீரும் என்றார்.


No comments