தெற்கும் திரண்ட கிளிநொச்சி போராட்டகளம்!வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளிற்கு நீதி கோரி போராடும் உறவுகள் தமது போராட்டத்தின் கிளிநொச்சி மாவட்ட 2000வது நாளைய பயணத்தை முன்னிட்டு மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றை சர்வதேசத்தை நோக்கி இன்று நடத்தியுள்ளனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில்; கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்லியாகொடவின் பாரியார் மற்றும் கைது செய்யப்பட்டு பிணையில் விடுக்கப்பட்டுள்ள ஆசிரிய சங்க தலைவர் ஜோசப் ஸ்ராலின் உள்ளிட்ட பலரும் பங்கெடுத்திருந்தனர்.


வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது போராட்டத்தைஆரம்பித்து 2000 நாட்களை எட்டியுள்ள இன்றைய தினத்தில் கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்பு  போராட்டம் ஒன்றை முன்னெடுதுள்ளனர்.
No comments