மத்தளவும் விற்பனைக்காம்?சீனாவிடம் கடன் வாங்கி கட்டப்பட்ட மத்தள விமான நிலையத்தின் ஒரு பங்கினை விற்கவேண்டும் என கப்பல்துறை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த விமான நிலையத்திற்கு விமானங்கள் வருகை தராத காரணத்தினால் சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் 100 மில்லியன் டொலர் கடன்களை பெற்றே இந்த விமான நிலையத்தை புனரமைத்துள்ளதாகவும் அதற்கான கடனையும் செலுத்தவேண்டியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நல்லாட்சி காலத்தில் விமானங்களது வரவின்மையால் நெல்காய்யப்போடும் தரையாக மத்தள பயன்படுத்தபடடமை குறிப்பிடத்தக்கது


No comments