வெளிநாடு செல்ல முற்பட்ட 17 பேர் பருத்துறையில் கைது!


யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் இருந்து வெளிநாடு செல்ல முற்பட்ட 17 பேர் இன்று (29) திங்கட்கிழமை பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 15 பேர் சிலாபம் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் இருவர் கிளிநொச்சி பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் குழு ஒன்று நடமாடுவதாக பருத்தித்துறை காவல்துறையினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் அவர் சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டு ஒன்றிற்க்கு செல்ல முற்றபட்டதாக தெரியவந்துள்ளது.

அதனை அடுத்து அவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

 

No comments