கயிறு திரிக்கும் இரா.சாணக்கியன்!இலங்கை அரச பிரதிநிதிகளுடள் சென்று தமிழர்களின் அரசியல் பிரச்சனைக்கான தீர்வு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுடன் பேசியதாக அவிழ்த்துவிட்டுள்ளார் சின்ன சுமந்திரன் சாணக்கியன்.

உலக நாடுகளில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து இலங்கையிலுள்ள தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு எவ்வாறான அழுத்தங்களை பிரயோகிக்க முடியும் என்பது தொடர்பில் கலந்துரையாடியிருந்தேன் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

கொமன்வெல்த் அமைப்பின் 65-ஆவது நாடாளுமன்றக் கூட்டத்தொடர் கனடாவில் நடைபெற்றது.

500 இற்கும் அதிகமான பல்வேறு நாடுகளையும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கூட்டத்தொடரில் பங்கேற்றிருந்தனர். இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக இரா.சாணக்கியன்; பங்கேற்றிருந்தார்.

கொமன்வெல்த் அமைப்பின் 65-ஆவது நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இலங்கையினை பிரதிநிதித்துவப்படுத்தி சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, அமைச்சர்களான காமினி லொகுகே, சி.பி ரத்னாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோகினி கவிரத்ன, இரா.சாணக்கியன் மற்றும் நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments