வட கடல் நிறுவனமும் விற்பனைக்கு!



இலங்கை அரசு காணிகளை சர்வதேச நாடுகளிற்கு தாரை வார்த்துவருகின்ற நிலையில் அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவோ பாரம்பரிய கடற்றொழில் நிறுவனங்களை விற்பனை செய்ய தயாராகிவருகிறார்.

அவ்வகையில் உள்ளுர் வலை உற்பத்தி நிறுவனமாக கடந்த 30 வருடங்ககளிற்கு மேலாக இயங்கிவரும் வட கடல் நிறுவனத்தினை தனியாரிற்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

வலை உற்பத்தி தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்றவர்களை, பங்குதாரர்களாக உள்ளடக்கி, தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன், வலைத் தொழிற்சாலைகளை செயற்படுத்த எதிர்பார்ப்பதாக, கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யுhழ்ப்பாணத்தின் குருநகரிலும் தெற்கின் லுணுவல பகுதியிலும் வடகடல் வலை உற்பத்தி ஆலைகள் இயங்கிவருகின்றன.

இந்நிலையில் மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமையால், லுணுவில வடகடல் தொழிற்சாலை ஊழியர் சங்கத்தினால், கடற்றொழில் அமைச்சின் பிரதான நுழைவாயிலை முற்றுகையிட்டு இன்று (31) ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்தது.

கடற்றொழில் அமைச்சின் கீழ் இயங்கும் லுனுவில பிரதேசத்தில் அமைந்துள்ள மீன்பிடி வலைகளை உற்பத்தி செய்யும் வடகடல் தொழிற்சாலையின் ஊழியர்களே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

போராட்டகார்களுடன் பேச்சுகளை நடத்திய அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தோல்வி அடைந்த அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் திட்டத்தில் பின்னடைவை சந்தித்துள்ள வட கடல் நிறுவனத்தையும், அந்நிறுவனத்தின் பணியாளர்களையும் பங்குதாரர்களாக கொண்டு, தனியார் முதலீட்டாளர்களை  உள்ளீர்ப்பது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ளார். 


No comments