அம்பாறையில் கப்டன் நேரு பவுன்டேசன்!

 


"கப்டன் நேரு பவுன்டேசன் "எனும் மாமனிதர் சந்திரநேரு ஞாபகார்த்த அறக்கட்டணையினை ஆரம்பித்துள்ளதாக மகனும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நேரு அறிவித்துள்ளார்.

இன்று முதல் தாயகத்தில் எமது மாவட்ட  மக்களுக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் முகமாக  உத்தியோக பூர்வமாக  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது நாள்வரை எமது மக்களுக்களின்   கல்விக்கான சேவைகள் வாழ்வாதாரா உதவிகள் விளையாட்டு துறையை மேம்படுத்துவதற்கான உதவிகள் கலை பண்பாட்டு  என சமூக சேவைகள்   அனைத்தும்  நேரடியோகவோ அல்லது மறைமுகமாகவோ தாயகத்திலுள்ள  தனிபட்டவர்களின் வங்கிகணக்குகளினூடக  உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இருந்த போதிலும் அறக்கட்டளை ஒன்றை ஸ்தாபித்து அதனூடாக  தன்னால் இயன்றதை தன்  மக்களுக்கு செய்யவேண்டும் என்பது மறைந்த எனது தந்தையார் அரியநாயகம் சந்திரநேருவின் நீண்ட நாள் கனவுவாக இருந்தது. 

அவர் மறைந்து 17 வருடங்களின் பின்னர் அவரது கனவொன்று  இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

 "கப்டன் நேரு பவுன்டேசன் "  எமது மாவட்ட மக்களுக்கு தோளோடு தோள் நின்று துயர் துடைக்க தன்னாலான உதவிகளை மேற்கொள்ளும்  என்பதை மனமகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

அத்துடன் எனது திருக்கோவில் அலுவலகமும் உத்தியோக பூர்வமாக இன்று முதல் மீண்டும் இயங்குகின்றது. கடந்த ஆண்டு இவ் அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் இடையில் ஏற்பட்ட சிறு தடங்கல் காரணமாக முழுமையாக செயற்படவில்லை. 

இருப்பினும்  இன்று முதல் அலுவலகம் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9.00-  5.00 மணிவரை உங்கள் தேவைகள் மற்றும் பிரச்சனைகள் தொடர்பில் எனது அலுவலகத்தில்  நேரடியாக முறைப்பாடுகளை பதிவு செய்து  தொடர்புகொள்ள முடியும்.

தொ.இல.0677200205

No comments