வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் விபத்து!வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் பயணித்த கார் நேற்று (7) மாலை மின் கம்பத்துடன் மோதி பாரிய  விபத்துக்குள்ளாகியது. இதில் பயணித்தவர்கள் உயிர் தப்பியுள்ளனர்.

மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தலைமையில் மருத்துவ முகாம் இடம் பெற்றது.

குறித்த மருத்துவ முகாம் நிறைவடைந்து நானாட்டானில் இருந்து பயணிக்கும் போதே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தின் போது வாகனத்தின் முன் பகுதி முற்றாக சேதம் அடைந்துள்ளது.  

No comments