எரித்தது யார்:ரணில் விட்டபாடாகவில்லை!ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது வீட்டினை எரித்தவர்களை  விட்டபாடாகவில்லை. வீடு திக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காக  இன்றைய தினம் கொழும்பு குற்றவியல் விசாரணை திணைக்களத்துக்கு வருகை தந்ததாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் சகோதரி துலாஞ்சி பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வீடு திக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காக நான் இன்றைய தினம் கொழும்பு குற்றவியல் விசாரணை திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டேன்.

வீடு தீக்கிரையாக்கப்பட்ட அன்று ஆர்ப்பாட்ட இடத்தில் நானும் நின்றிருந்ததால் விசாரணைக்காக என்னை அழைத்திருந்தனர். மிகவும் சுமூகமான முறையில் விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறே கோரினர்.அதற்கமைவாக நான் எனது பதிலை வழங்கினேன். மிகவும் சுமூகமான முறையில் விசாரணை இடம்பெற்றது. வாக்குமூலமளித்தன் பின்னர் எனது விசாரணை முடிவுற்றது. எவ்வித பிரச்சினையும் இருக்கவில்லை துலாஞ்சி பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.No comments