இலங்கையில் ஆளுக்கொன்று: 70 அமைச்சர்களாம்!

அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் சுமார் 70இற்கும் அதிகமானோரை நியமிக்க அரசாங்கம் ஆலோசித்து வருகின்றது. அதற்கு சர்வகட்சி அரசாங்கம் எனவும் பெயரிட்டுள்ளனர். அவ்வாறானதொரு சர்வகட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர், நாட்டிலுள்ள பொதுமக்களின் அபிலாசைகள் இல்லாதொழிக்கப்படும் ன்பதால் ஐக்கிய மக்கள் சக்தி அமைச்சு பதவிகளை ஏற்காதிருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி ஆகிய நாம் அரசாங்கத்தின் சிறந்த வேலைத்திட்டங்களுக்கு ஆதரவு வழங்குவோம். பிழையான செயற்பாடுகளுக்கு நாம் எதிர்ப்பு வெளியிடுவதுடன் அந்த பிரச்சினையை தீர்க்க யோசனைகளை முன்வைப்போம். நாடு வீழ்ந்துள்ள நிலையிலிருந்து நாட்டை கட்டியெழுப்ப நாம் எதிரணியிலிருந்து செயற்படுவோம். இதனால் செலவினம் குறைவடையும் என்பதுடன் அந்த தொகையினை எமது தாய்மார்களுக்கான போசனை வேலைத்திட்டங்களுக்காகவும் பாடசாலை மாணவர்களுக்கான பகலுணவு வேலைத்திட்டத்திற்கு ஒதுக்கிட வேண்டும்.மாணவர்களின் கல்வி மற்றும் டிஜிட்டல் எண்ணக்கருவின் ஊடாக நாட்டின் 4 பாகங்களிலும், பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அந்த நிதிகளை ஒதுக்க வேண்டும்.

அமைச்சரவை அமைச்சுப் பதவியை பெற்றுக்கொள்வதைவிட இதனை செய்வது மேலாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

No comments